இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று

 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொற்களினால் பெருமை கொள்கிறோம். உலகத்தின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று சொல்லி பெருமிதம் கொள்கிறோம். ஆனால் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படுகிறோம் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக்கிய பள்ளிகள் இன்று தமிழை விரும்பினால் கற்கலாம் என்று தான் சொல்கிறார்கள் இன்னும் சில பள்ளிகளில் அதற்கான வாய்ப்பை அவர்கள் தரவில்லை ஏனென்றால் தமிழ்பாடமே அங்கே இல்லை. பெற்றோர்களோ அதை ஆதரிக்கிறார்கள். இன்றும் சில மாணவர்கள் தமிழில் நான்கு வார்த்தைகளை கோர்வையாக பேச திணறுகிறார்கள். இந்த மொழி இடைவெளியினால் அவர்களுக்கும் அவர்களது தாத்தா பாட்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிறது காரணம் இவர்களுக்கு தமிழ் தெரியாது  அவர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். இது ஒரு சிறு எடுத்துக்காட்டு தான். எந்த ஒரு பாடமும் தாய்மொழியில் கற்றால் அது மிகவும் சுலபமாக மனதில் நிற்கும். நாட்டுப்பற்று எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மொழிப்பற்றும் முக்கியம். மொழியை நேசிக்கத் தெரியாத ஒருவனால் எப்படி தன் தாய் நாட்டை நேசிக்க