இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்ன தவறை செய்யக்கூடாது...

படம்
நம் வாழ்வில் நாம் அனைவரும் தவறு செய்திருப்போம். ஆனால் அவர் செய்த தவறை நான் செய்யவேமாட்டேன் என சில எண்ணங்கள் இருக்கும். அது போன்ற உன் எண்ணம் என்ன என நான் என் தம்பியிடம் கேட்டேன்.  அதற்கு அவன், இன்று பலரும் தன் பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்காமல் அவர்களை தனியே விட்டு விடுகிறார்கள். அந்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறன் என்றான். மேலும் அவன் நான் படித்திருக்கிறேன் மாதம் 750 ரூபாய் கொடுத்து வயதானவர்களை தத்தெடுத்துக்கொள்ளலாம்(அவர்களின் பொருளாதாரதிற்கு உதவுவதன் மூலம்). இந்த நிலைமை என் பெற்றோர்க்கு வரக்கூடாது என்று நினைக்கிறன் என்றான்.  பயப்படாததே அக்கா என் பிள்ளைகள் நாளை அவர்களின் தாத்தா பாட்டியை தத்தெடுக்கும் நிலைமை அவர்களுக்கு வராது. அன்று நீ அன்புக்காக ஏங்கும் பொழுது அன்பு கொடுத்தவர்கள் அவர்கள். இன்று அன்புக்காக ஏங்குகிறார்கள். அவர்களுக்கு அன்பை கொடு. மாறாக அவர்களை கொடுத்து விடாததே.

அன்று என் தாய் இன்று உன் தாய்

படம்
சிறு வயதில் சகோதர சகோதரியிடம் அவள் என்  அம்மா, எனக்கும் மட்டும் தான் என்று கூறி சண்டையிட்டோம். அவள் எங்கு சென்றாலும் முந்தானை பிடித்து நடந்தோம். ஆனால் இன்றோ அம்மாவை நீ உன் வீட்டில் வைத்துக்கொள் என்று மாறி மாறி காரணம் சொல்லி மறுத்து கொண்டிருக்கிறோம். இன்றும் சிலர் தான் தாய் தந்தை ஆகா என்றோ ஒரு நாள் மாறுவோம் என்பதை ஏனோ மறந்தனர். காலம் கனிய காத்திருப்போம்......  உனக்காக வாழும் சுயநலமற்ற உறவு பெற்றோர்கள் ......  மறவாதே உன் பிள்ளைகள் உன்னை கவனிக்கிறார்கள்.......

ஹெல்மெட் அணிய வேண்டுமா?

சில சமயங்களில் ஏன் நாம் ஹெல்மெட் அணிய வேண்டும் நான் இங்குள்ள கடைக்கு தானே போகிறேன் அதுக்காக நான் அதை என் தலையில் மாட்டிக்கொள்ள வேண்டுமா? என்று எண்ணுவது உண்டு.இப்படி நினைத்த உங்களில் நானும் ஒருவள்.                       இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாள் ...... என் அத்தைக்கு திடிரென்று விபத்து ஏற்பட்டது.அவர் சாலையை வாகனதோடு கடக்க முயற்சி செய்த போது எதிர் பாராமல் நடந்த விபத்து அது.தலையில் பலமான அடியோடு உயிர் பிழைத்த அவர் கோமாவுக்கு சென்றார்.மனம் உடைந்த மாமா தன் மகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.மருத்துவர்கள் உங்கள் மனைவி பிழைப்பது கடினம் என்று கூறிய போதும் அவர் மன தைரியத்துடன் தன் மனைவி குணமடைவாள் என்று கூறிக்கொன்டே இருந்தார்.இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் முகத்தில் புன்னகையும் மனதில் வருத்தமும் உள்ளதை கண்டேன்.என் முகத்திலும் புன்னகையை வரவழைத்துக்கொண்டு  அவர்முன் கண்கலங்காமல் அங்கு அமர்ந்து அவரிடம் பேசினேன்.சில மணித்துளிகள் கடந்தன.அவர் எனக்காக ஒரு அன்பு பரிசு ஒன்றை கொடுத்தார்.அதை பார்த்ததும் என் கண்கள் கலங்கின.அதில் ஹெல்மெட்டை அவர் வைத்துருந்தா