ஹெல்மெட் அணிய வேண்டுமா?

சில சமயங்களில் ஏன் நாம் ஹெல்மெட் அணிய வேண்டும் நான் இங்குள்ள கடைக்கு தானே போகிறேன் அதுக்காக நான் அதை என் தலையில் மாட்டிக்கொள்ள வேண்டுமா? என்று எண்ணுவது உண்டு.இப்படி நினைத்த உங்களில் நானும் ஒருவள்.

                      இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாள்......

என் அத்தைக்கு திடிரென்று விபத்து ஏற்பட்டது.அவர் சாலையை வாகனதோடு கடக்க முயற்சி செய்த போது எதிர் பாராமல் நடந்த விபத்து அது.தலையில் பலமான அடியோடு உயிர் பிழைத்த அவர் கோமாவுக்கு சென்றார்.மனம் உடைந்த மாமா தன் மகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.மருத்துவர்கள் உங்கள் மனைவி பிழைப்பது கடினம் என்று கூறிய போதும் அவர் மன தைரியத்துடன் தன் மனைவி குணமடைவாள் என்று கூறிக்கொன்டே இருந்தார்.இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் முகத்தில் புன்னகையும் மனதில் வருத்தமும் உள்ளதை கண்டேன்.என் முகத்திலும் புன்னகையை வரவழைத்துக்கொண்டு  அவர்முன் கண்கலங்காமல் அங்கு அமர்ந்து அவரிடம் பேசினேன்.சில மணித்துளிகள் கடந்தன.அவர் எனக்காக ஒரு அன்பு பரிசு ஒன்றை கொடுத்தார்.அதை பார்த்ததும் என் கண்கள் கலங்கின.அதில் ஹெல்மெட்டை அவர் வைத்துருந்தார்.அவர் மனதில் அந்த சம்பவம் ஆழமாக பதிந்துள்ளது என்பதை உணர்ந்தேன்.மாதங்கள் கடந்தன அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அத்தையின் உடல் நிலை குணமடைய ஆரம்பித்தது.அவர் நம்பிக்கையுடன் இருந்ததே அத்தையின் உடல் நிலை திரும்ப காரணம் என்று நினைத்தேன்.
.
.
.
.
சில சமயங்களில் நம்பிக்கை இருந்தால் எதையும் நடத்திக்காட்ட முடியும் என்பதை நான் உணர்தேன்.
.
.
.
.
விபத்து வந்த பிறகு தான் மாற வேண்டும் என்பதில்லை அன்பானவர்களின் வார்த்தைக்காகவும் மாறலாம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

முயற்சிசெய் தவறில்லை

அன்று என் தாய் இன்று உன் தாய்