இடுகைகள்

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று

 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொற்களினால் பெருமை கொள்கிறோம். உலகத்தின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று சொல்லி பெருமிதம் கொள்கிறோம். ஆனால் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படுகிறோம் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக்கிய பள்ளிகள் இன்று தமிழை விரும்பினால் கற்கலாம் என்று தான் சொல்கிறார்கள் இன்னும் சில பள்ளிகளில் அதற்கான வாய்ப்பை அவர்கள் தரவில்லை ஏனென்றால் தமிழ்பாடமே அங்கே இல்லை. பெற்றோர்களோ அதை ஆதரிக்கிறார்கள். இன்றும் சில மாணவர்கள் தமிழில் நான்கு வார்த்தைகளை கோர்வையாக பேச திணறுகிறார்கள். இந்த மொழி இடைவெளியினால் அவர்களுக்கும் அவர்களது தாத்தா பாட்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிறது காரணம் இவர்களுக்கு தமிழ் தெரியாது  அவர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். இது ஒரு சிறு எடுத்துக்காட்டு தான். எந்த ஒரு பாடமும் தாய்மொழியில் கற்றால் அது மிகவும் சுலபமாக மனதில் நிற்கும். நாட்டுப்பற்று எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மொழிப்பற்றும் முக்கியம். மொழியை நேசிக்கத் தெரியாத ஒருவனால் எப்படி தன் தாய் நாட்டை நேசிக்க

என்ன தவறை செய்யக்கூடாது...

படம்
நம் வாழ்வில் நாம் அனைவரும் தவறு செய்திருப்போம். ஆனால் அவர் செய்த தவறை நான் செய்யவேமாட்டேன் என சில எண்ணங்கள் இருக்கும். அது போன்ற உன் எண்ணம் என்ன என நான் என் தம்பியிடம் கேட்டேன்.  அதற்கு அவன், இன்று பலரும் தன் பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்காமல் அவர்களை தனியே விட்டு விடுகிறார்கள். அந்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறன் என்றான். மேலும் அவன் நான் படித்திருக்கிறேன் மாதம் 750 ரூபாய் கொடுத்து வயதானவர்களை தத்தெடுத்துக்கொள்ளலாம்(அவர்களின் பொருளாதாரதிற்கு உதவுவதன் மூலம்). இந்த நிலைமை என் பெற்றோர்க்கு வரக்கூடாது என்று நினைக்கிறன் என்றான்.  பயப்படாததே அக்கா என் பிள்ளைகள் நாளை அவர்களின் தாத்தா பாட்டியை தத்தெடுக்கும் நிலைமை அவர்களுக்கு வராது. அன்று நீ அன்புக்காக ஏங்கும் பொழுது அன்பு கொடுத்தவர்கள் அவர்கள். இன்று அன்புக்காக ஏங்குகிறார்கள். அவர்களுக்கு அன்பை கொடு. மாறாக அவர்களை கொடுத்து விடாததே.

அன்று என் தாய் இன்று உன் தாய்

படம்
சிறு வயதில் சகோதர சகோதரியிடம் அவள் என்  அம்மா, எனக்கும் மட்டும் தான் என்று கூறி சண்டையிட்டோம். அவள் எங்கு சென்றாலும் முந்தானை பிடித்து நடந்தோம். ஆனால் இன்றோ அம்மாவை நீ உன் வீட்டில் வைத்துக்கொள் என்று மாறி மாறி காரணம் சொல்லி மறுத்து கொண்டிருக்கிறோம். இன்றும் சிலர் தான் தாய் தந்தை ஆகா என்றோ ஒரு நாள் மாறுவோம் என்பதை ஏனோ மறந்தனர். காலம் கனிய காத்திருப்போம்......  உனக்காக வாழும் சுயநலமற்ற உறவு பெற்றோர்கள் ......  மறவாதே உன் பிள்ளைகள் உன்னை கவனிக்கிறார்கள்.......

ஹெல்மெட் அணிய வேண்டுமா?

சில சமயங்களில் ஏன் நாம் ஹெல்மெட் அணிய வேண்டும் நான் இங்குள்ள கடைக்கு தானே போகிறேன் அதுக்காக நான் அதை என் தலையில் மாட்டிக்கொள்ள வேண்டுமா? என்று எண்ணுவது உண்டு.இப்படி நினைத்த உங்களில் நானும் ஒருவள்.                       இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாள் ...... என் அத்தைக்கு திடிரென்று விபத்து ஏற்பட்டது.அவர் சாலையை வாகனதோடு கடக்க முயற்சி செய்த போது எதிர் பாராமல் நடந்த விபத்து அது.தலையில் பலமான அடியோடு உயிர் பிழைத்த அவர் கோமாவுக்கு சென்றார்.மனம் உடைந்த மாமா தன் மகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.மருத்துவர்கள் உங்கள் மனைவி பிழைப்பது கடினம் என்று கூறிய போதும் அவர் மன தைரியத்துடன் தன் மனைவி குணமடைவாள் என்று கூறிக்கொன்டே இருந்தார்.இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் முகத்தில் புன்னகையும் மனதில் வருத்தமும் உள்ளதை கண்டேன்.என் முகத்திலும் புன்னகையை வரவழைத்துக்கொண்டு  அவர்முன் கண்கலங்காமல் அங்கு அமர்ந்து அவரிடம் பேசினேன்.சில மணித்துளிகள் கடந்தன.அவர் எனக்காக ஒரு அன்பு பரிசு ஒன்றை கொடுத்தார்.அதை பார்த்ததும் என் கண்கள் கலங்கின.அதில் ஹெல்மெட்டை அவர் வைத்துருந்தா

முண்டாசுக்கவிஞனே

படம்
ஒரு கவிஞருக்கு தன் பாடலில் கிடைக்கும் பொற்காசை காட்டிலும் அதை வாசித்து மக்கள் கூரும் கருத்துகளுக்கே அவன் அடிபணிவான்.நூறு ஆண்டுகளுக்கு முன் உம் பாடலைக் கேட்க ஆளில்லை.ஆனால் இன்றோ உம் பாடல்கள் கேட்காத காதில்லை.இதுவே நீ கண்ட வெற்றி.நீ நாட்டிய அடிக்கல்.சாதிகளுக்கு நீ வைத்த முற்றுப்புள்ளி.பெண்களுக்கு நீ காட்டிய வழி. . . . . . உன் எண்ணங்கள் தூய்மையானது என்றல் உலகம் உன்னை போற்றும்.களமும் கடந்தன இன்று உம்மை போற்றுகிறோம் முண்டாசு கவிஞனே.

சாதியின் தாக்கம்

நான் பள்ளி ஆசிரியர் ஆகா பணியாற்றியப் பொது நடந்த சம்பவம்.அன்று பள்ளி விடுமுறை.இருப்பினும் பள்ளி வேலைகள் இருந்ததால் அன்று பள்ளிக்கு செல்ல வேண்டியாய் நிலை.என்னுடன் பணிபுரிகின்ற ஆசிரியரும் பள்ளிக்கு வந்திருந்தார்.மாணவர்களின் விவரத்தை கணக்கெடுக்க வேண்டியதே அப்பணி.நானும் என்னால் முடிந்த வரை விவரத்தை சேகரித்து விட்டேன்.ஆனால் மாணவர்களின் சாதியை சேகரிக்க தவறிவிட்டேன்.இருந்தபோதிலும் மாணவர்களின் விவரத்தை நாளை பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஒப்படைக்க வேண்தடியா கட்டாயம்.ஆனால் நாளை மாணவர்களிடம் இருந்து விவரத்தை சேகரிப்பதோ மிகவும் கடினம்.என்ன செய்வது என்று புரியாமல் அருகில் இருந்த ஆசிரியரிடம் கேட்டேன் இதற்கு முன் மாணவர்களின் விவரம் குறிப்புட்டு வைத்ததுண்டா என்று.அவரும் அதற்கு பதிலளித்தார் இல்லை நானும் மாணவர்களிடம் இருந்து சாதி விவரத்தை வாங்கவில்லை ஆனால் ஒரு கவலையும் இல்லை சில மாணவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர் எந்த சாதியினர் என்று என சிறிதும் யோசிக்காமல் சொன்னார்.சற்றே மனம் நெகிழ்ந்து போனேன்.இன்றும் இப்படி பட்ட மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று மனம் வருந்தினேன்.மாணவர்கள் இதை கேட்ட

உன் தந்தையின் அழுகுரல்

சாலை ஓரமா ஒரு முதியவர் பாக்கவே ரொம்ப பாவமான நிலைமைல என்கிட்ட வந்து சில கேள்வி கேட்டார்  : உனக்கு உடம்பு சேரி இல்லனா யாரு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போவாங்க? நா சொன்ன அப்பா தன் கூட்டிட்டு போவாருனு.  உனக்கு வாழ்க்கைல வரக்கூடாத துன்பம் வந்தா யாரு வந்து சேரி பண்ணுவாங்க? இது என்ன கேள்வி என் அப்பா தான் சேரி பண்ணுவாரு. நீ கேட்டதை எல்லாம் யாரு வாங்கி கொடுப்பாரு?அப்பா தான் வாங்கி தருவாருனு சொன்னேன். இரவு நேரத்துல நீ படிக்கும் போது யாரு டீ வெச்சு தருவாங்க?அப்பா தான் வெச்சு தருவாரு. ஆனா இதுவே உன் அப்பாக்கு உடம்பு சேரி இல்லனா யாரு கூட்டிட்டு போவாங்க ?  அப்பாக்கு துன்பம் வந்தா யாருகிட்ட சொல்லுவாரு ? அவுரு ஆசைப்பட்டதை எல்லாம் யாரு வாங்கி தருவாரு ? அவுரு ராத்திரி பகல்னு பாக்காம வேல பாத்தபோது யாரு டீ வெச்சு குடுத்தாங்க ? உன்ன பத்தி யோசிக்கும் அப்பாவையும் கொஞ்சம் யோசிக்கணும்னு சொல்லிட்டு அவுரு இன்னொரு கருத்தையும் சொன்னாரு . நீ ஆசை பட்டதை எல்லாம் பாத்து பாத்து பண்ணுன உன் அப்பாவுக்கு பிற்காலத்துல நீ பண்ண வேண்டிய கடமையை பண்ணாம விட்டா உன் அப்பாவுக்கும் என் நிலைமை தானு புலபீட்டு அவு