இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முயற்சிசெய் தவறில்லை

என் பள்ளியின் அறிவிப்பு பலகையில் அந்த கலை போட்டிக்கான விதிமுறைகளை படித்தேன்.அதில் கலந்து கொள்ள மூன்று மொழிகள் அறிந்திருக்க வேண்டும் மேலும் அவர்களின் மதிப்பெண் சதவீதம் தொண்ணூறுக்கு மேல் இருந்தால் மட்டும் அவர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.நான் அதை படித்து விட்டு வருத்தப்பட்டேன் என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று.என் நண்பர்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள் ஆறுதல் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருந்த நிலை அது.எங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட அது ஒரு சிறந்த வாய்ப்பு .இந்த போட்டில் பங்கு பெற தான் இரண்டு வருட காலம் பயிற்சி செய்தோம்.ஆனால்  அப்போது தெரியவில்லை இப்படியொரு விதிமுறைகள் வைப்பார்கள் என்று.விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களால் முடியாவிட்டாலும் மனம் தவறாமல் அதற்கு விண்ணப்பித்தோம்.எங்கள் பள்ளியில் அந்த போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் நண்பர்கள் குழு மட்டும் தான்.சில நாள் கழித்து அந்த போட்டிக்கான இறுதித்தேர்வுப் பெயர்கள் வந்தன.எங்கள் ஆசிரியர் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரபித்தார்.அதில் என் நண்பன் ராம் பெயர்

பெற்றோர் கவனத்திற்கு!!

பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்குடும்கும் பெற்றோருக்கு .நீங்கள் உங்கள் செல்ல பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டதை தர வேண்டும் என்பது தவறில்லை அனால் கேட்டவுடன் வாங்கிக்குடும் பொழுது அவர்களுக்கு மனதில் நாம் என்ன  கேட்டாலும் கிடைக்கும் என்ற எண்ணத்தை நாமே உருவாக்கி தருவது போல.அதன் பின் அவர்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எந்த அளவுக்கும் துணிவார்கள்.பின் வருந்தி பயனில்லை.சில சமயங்களில் அவர்களை  வருத்தப்பட வைக்கும் செயல் பல நேரங்களில் நல்ல எதிர்காலத்தை தரும்.

யார் இவர்கள்?

ஒரு பாடல் படப்பிடிபிற்காக நானும் என் நண்பர்கள் குழுவும் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது.நாங்கள் குழுவுடன் சென்றோம்.நல்லபடியாக  சென்றடைந்து விட்டோம் .வந்த சில மணி நேரத்தில் அங்கு  சில இடங்களை சுற்றி பாக்கலாம் என்ற ஆர்வத்தில் பணம் மற்றும் கைபேசியை கூட எடுக்காமல் சென்று விட்டோம் நானும் என் நண்பனும்.நன்றாக சுத்தினோம்.சுற்றியதில் பசி அதிகம் ஆனது சரி விடுதிக்கு சென்று விடலாம் என்று நினைக்கும் பொது தான் தெரிந்தது நாங்கள் வழி தவறிவிட்டோம் என்று.மொழி தெரியாத ஊரில் எங்களுக்கு தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான்.நாங்கள்  இருந்த இடத்திற்கு அருகில் பாட்டு கசேரி நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான் திடிரென்று ஒரு யோசனை நாம் ஏன் பாட்டு பாடி நம் பசிக்கான பணத்தை திரட்ட கூடாது என்று யோசித்தோம்.நம் நண்பர்கள் கண்டிப்பாக நம்மை தேடி வருவார்கள்.ஆனால் அதுவரையும் பசிதாங்க முடியாது எனவே பாட ஆரபித்தோம் கூட்டம் வர ஆரம்பித்தது.அவரகள் எங்களை பாராட்டி சில காசுகளையும் கொடுத்தார்கள்.சில நொடிகளில் எங்கள் நண்பர்கள் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள்.அவர்களும் எங்களுடன் சேர்ந்து பாட ஆர