முயற்சிசெய் தவறில்லை

என் பள்ளியின் அறிவிப்பு பலகையில் அந்த கலை போட்டிக்கான விதிமுறைகளை படித்தேன்.அதில் கலந்து கொள்ள மூன்று மொழிகள் அறிந்திருக்க வேண்டும் மேலும் அவர்களின் மதிப்பெண் சதவீதம் தொண்ணூறுக்கு மேல் இருந்தால் மட்டும் அவர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.நான் அதை படித்து விட்டு வருத்தப்பட்டேன் என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று.என் நண்பர்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள் ஆறுதல் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருந்த நிலை அது.எங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட அது ஒரு சிறந்த வாய்ப்பு .இந்த போட்டில் பங்கு பெற தான் இரண்டு வருட காலம் பயிற்சி செய்தோம்.ஆனால்  அப்போது தெரியவில்லை இப்படியொரு விதிமுறைகள் வைப்பார்கள் என்று.விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களால் முடியாவிட்டாலும் மனம் தவறாமல் அதற்கு விண்ணப்பித்தோம்.எங்கள் பள்ளியில் அந்த போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் நண்பர்கள் குழு மட்டும் தான்.சில நாள் கழித்து அந்த போட்டிக்கான இறுதித்தேர்வுப் பெயர்கள் வந்தன.எங்கள் ஆசிரியர் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரபித்தார்.அதில் என் நண்பன் ராம் பெயர் இருந்தது எங்கள் பெயர் வரவில்லை என்ற கவலை இல்லை அவன் பெயர் வந்தது என்ற சந்தோஷம் தான் அதிகம் இருந்தது.பின் ஆசிரியர் எங்கள் பெயர் ஒன்றன் பின் ஒன்றாக படித்தார்.எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.அதிர்ச்சி அடைந்த நாங்கள் ஆசிரியரிடம் எப்படி எங்கள் அனைவரின் பெயரும் உள்ளது என்று கேட்டோம்.அவர் அதற்கு இந்த முதல்கட்ட பரிசோதனை உங்களின் மன திறமையை பரிசோதிக்கவே என்று கூறினார்,அதாவது விதிமுறைகளை கண்டு விண்ணப்பிகூட முடியாமல் நம்பிக்கையின்றி இருந்தவர்கள் மத்தியில் நீங்கள் விண்ணப்பித்தீர்கள்.அதுவே உங்கள் மன வலிமை காட்டியுள்ளது.அது தான் நீங்கள் தேர்ச்சி பெற காரணம் என கூறினார்.எங்கள் மன தைரியத்தை கண்டு பெருமை கொண்டோம்.முயற்சி செய்யாதவர்கள் மத்தியில் நாங்கள் செய்த முயற்சி எங்களை நல்ல ஒரு பாதையில் கொண்டு சேர்த்து விட்டது.

கருத்துகள்

  1. அருமை டா.. தெய்வத்தால் ஆகாததெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலித் தரும்.. என்பது உண்மையே.. தங்களின் மனத்தைரியம் பாராட்டுக்குரியது..

    நீ தமிழில் எழுதுவது கூட உனது முயற்சி தானடா.. தொடர்ந்து எழுது தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

அன்று என் தாய் இன்று உன் தாய்

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று