யார் இவர்கள்?

ஒரு பாடல் படப்பிடிபிற்காக நானும் என் நண்பர்கள் குழுவும் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது.நாங்கள் குழுவுடன் சென்றோம்.நல்லபடியாக  சென்றடைந்து விட்டோம் .வந்த சில மணி நேரத்தில் அங்கு  சில இடங்களை சுற்றி பாக்கலாம் என்ற ஆர்வத்தில் பணம் மற்றும் கைபேசியை கூட எடுக்காமல் சென்று விட்டோம் நானும் என் நண்பனும்.நன்றாக சுத்தினோம்.சுற்றியதில் பசி அதிகம் ஆனது சரி விடுதிக்கு சென்று விடலாம் என்று நினைக்கும் பொது தான் தெரிந்தது நாங்கள் வழி தவறிவிட்டோம் என்று.மொழி தெரியாத ஊரில் எங்களுக்கு தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான்.நாங்கள்  இருந்த இடத்திற்கு அருகில் பாட்டு கசேரி நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான் திடிரென்று ஒரு யோசனை நாம் ஏன் பாட்டு பாடி நம் பசிக்கான பணத்தை திரட்ட கூடாது என்று யோசித்தோம்.நம் நண்பர்கள் கண்டிப்பாக நம்மை தேடி வருவார்கள்.ஆனால் அதுவரையும் பசிதாங்க முடியாது எனவே பாட ஆரபித்தோம் கூட்டம் வர ஆரம்பித்தது.அவரகள் எங்களை பாராட்டி சில காசுகளையும் கொடுத்தார்கள்.சில நொடிகளில் எங்கள் நண்பர்கள் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள்.அவர்களும் எங்களுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள். மன நிகழ்வுடன் பணத்தை எடுக்க சென்றேன் அதற்குள் அந்த கசேரி காரர்கள் அந்த பணத்தை காலால் எட்டி உதைத்தார்கள். இப்படியும் சிலர் உள்ளார்களா என்று நினைத்து கொண்டு நாங்கள்  நகர்ந்து விட்டோம்.மறு  நாள் படப்பிடிப்பு ஆரம்பித்தது அங்கு சில நபர்கள் எங்களுக்கு உதவும் பணியில் இருந்தார்கள்.அதில் இருந்த ஒரு நபர் நேற்று பணத்தை காலால் உதைத்த நபர் என்று அறிந்தேன்.அவன் எதற்கு இங்கு வந்திருப்பான் எங்கள் படப்பிடிப்பை கலைக்கதான் வந்துள்ளானா என பல கோணங்களில் யோசித்த பின் அவனை பின் தொடர்ந்தேன்.அவனும் அவன் நண்பர்களும் அறிவிப்பு தாலை  அங்கு இருந்த மக்களுக்கு கொடுத்து கொண்டு இருந்தார்கள்.அவர்கள்  முகத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி தெரிந்தது.ஒரு சிலர் முகத்தில் ஒரு மரியாதை இருந்தது அந்த அறிவுப்பு தாலில் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.பின் அந்த தாலை வாங்கி படித்தேன் அதில் டீரீமர்ஸ் குருவ் என்று ஆங்கிலத்தில் இருந்தது மேலும் அதில் அது அவர்களது முதல் மேடை என்றும் இருந்தது.நேற்று பார்க்கும் போது இவர்களை போல ஒரு மனிதர்கள் உள்ளார்களா என யோசித்தேன் அனால் இன்று இப்படியும் சில நல்ல உள்ளங்கள் தன கனவுக்காக செய்யும் செயலை கண்டு வியந்தேன்.மேலும் என் குரு விடம் கேட்டேன் இவர்களின் நல்ல உள்ளம் எனக்கு ஏன் நேற்று தெரியாமல் போனது மேலும் நேற்று கெட்டவர்களாக தெரிந்த இவர்கள் இன்று நல்லவர்களாக தெரிகிறார்கள் இது ஏன் எனக்கு நேற்று தெரியாமல் போனது என்று கேட்டேன்.அதற்கு அவர் சில சமயங்களில் நானும் அவ்வாறு தவறாக  எண்ணுவது உண்டு என்று கூறினார்.மேலும் அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

அன்று என் தாய் இன்று உன் தாய்

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று