உன் தந்தையின் அழுகுரல்
சாலை ஓரமா ஒரு முதியவர் பாக்கவே ரொம்ப பாவமான நிலைமைல என்கிட்ட வந்து சில கேள்வி கேட்டார் : உனக்கு உடம்பு சேரி இல்லனா யாரு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போவாங்க? நா சொன்ன அப்பா தன் கூட்டிட்டு போவாருனு. உனக்கு வாழ்க்கைல வரக்கூடாத துன்பம் வந்தா யாரு வந்து சேரி பண்ணுவாங்க? இது என்ன கேள்வி என் அப்பா தான் சேரி பண்ணுவாரு. நீ கேட்டதை எல்லாம் யாரு வாங்கி கொடுப்பாரு?அப்பா தான் வாங்கி தருவாருனு சொன்னேன். இரவு நேரத்துல நீ படிக்கும் போது யாரு டீ வெச்சு தருவாங்க?அப்பா தான் வெச்சு தருவாரு. ஆனா இதுவே உன் அப்பாக்கு உடம்பு சேரி இல்லனா யாரு கூட்டிட்டு போவாங்க ? அப்பாக்கு துன்பம் வந்தா யாருகிட்ட சொல்லுவாரு ? அவுரு ஆசைப்பட்டதை எல்லாம் யாரு வாங்கி தருவாரு ? அவுரு ராத்திரி பகல்னு பாக்காம வேல பாத்தபோது யாரு டீ வெச்சு குடுத்தாங்க ? உன்ன பத்தி யோசிக்கும் அப்பாவையும் கொஞ்சம் யோசிக்கணும்னு சொல்லிட்டு அவுரு இன்னொரு கருத்தையும் சொன்னாரு . நீ ஆசை பட்டதை எல்லாம் பாத்து பாத்து பண்ணுன உன் அப்பாவுக்கு பிற்காலத்துல நீ பண்ண வேண்டிய கடமையை பண்ணாம விட்டா உன் அப்பாவுக்கும் என் நிலைமை தானு...