முயற்சிசெய் தவறில்லை
என் பள்ளியின் அறிவிப்பு பலகையில் அந்த கலை போட்டிக்கான விதிமுறைகளை படித்தேன்.அதில் கலந்து கொள்ள மூன்று மொழிகள் அறிந்திருக்க வேண்டும் மேலும் அவர்களின் மதிப்பெண் சதவீதம் தொண்ணூறுக்கு மேல் இருந்தால் மட்டும் அவர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.நான் அதை படித்து விட்டு வருத்தப்பட்டேன் என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று.என் நண்பர்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள் ஆறுதல் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருந்த நிலை அது.எங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட அது ஒரு சிறந்த வாய்ப்பு .இந்த போட்டில் பங்கு பெற தான் இரண்டு வருட காலம் பயிற்சி செய்தோம்.ஆனால் அப்போது தெரியவில்லை இப்படியொரு விதிமுறைகள் வைப்பார்கள் என்று.விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களால் முடியாவிட்டாலும் மனம் தவறாமல் அதற்கு விண்ணப்பித்தோம்.எங்கள் பள்ளியில் அந்த போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் நண்பர்கள் குழு மட்டும் தான்.சில நாள் கழித்து அந்த போட்டிக்கான இறுதித்தேர்வுப் பெயர்கள் வந்தன.எங்கள் ஆசிரியர் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரபித்தார்.அதில் என் நண்பன் ராம் ப...